இனி இலவச டோக்கன்கள் தேவையில்லை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

இனி இலவச டோக்கன்கள் தேவையில்லை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதியில் தினசரி வழங்கப்படும் 25 ஆயிரம் பெறுவதற்காக 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் பக்தர்கள் வரை வருகை தருவதால் டோக்கன்கள் இனி தேவையில்லை என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இலவச டோக்கன் மூலம் ஏழுமலையானை தரிசிக்கும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தனம் அறிவித்துள்ளது.

எனவே இன்று முதல் கொரோனாவுக்கு முன்பு இருந்தது போல் பக்தர்கள் திருப்பதி திருமலைக்கு நேராக சென்று கூண்டுக்குள் அடைபட்டு ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.