நகைக்கடை உரிமையாளருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 40 நாட்களாக இந்தியா முழுவதும் அத்தியாவசியமற்ற கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்ததை அடுத்து தற்போது பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு உள்ளது

அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹூப்ளி என்ற பகுதியில் உள்ள நகைக்கடை உரிமையாளர் ஒருவர் 40 நாட்களுக்கு முன் தனது கடையைத் திறந்தார்

ஏற்கனவே அவருக்கு குறைந்த அளவே வாடிக்கையாளர்கள் இருந்த நிலையில் தற்போது அவரது கடையில் நகை வாங்க யாருமே வரவில்லை என்று கூறியுள்ளார்

பொருளாதார சீரழிவு காரணமாக உலகம் முழுவதும் நகைகள் தங்கம் வெள்ளி விலை மிக அதிகமாகியதை அடுத்து பொதுமக்கள் விலையை சொன்னவுடன் பதறி அடித்து கொண்டு கடையை விட்டு வெளியேறி விடுகின்றனர் என்றும் கடையை திறந்து இரண்டு நாட்கள் ஆகியும் இன்னும் ஒரு கிராம் தங்கம் வெள்ளி கூட விற்பனையாகவில்லி என்றும் அவர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply