shadow

திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமில்லை. மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவின் அனைத்து திரையரங்குகளிலும் தேசிய கீதம் ஒலிக்க வேண்டும் என்று மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உத்தரவிட்டது. இந்த உத்தரவை பின்பற்றாத திரையரங்குகள் மற்றும் தேசிய கீதம் ஒலிக்கும்போது எழுந்து நிற்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தது.

இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்த மத்திய அரசு, திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிப்பது கட்டாயம் இல்லை என்றும், இதற்கென அமைக்கப்பட்டுள்ள அமைச்சர் குழுவின் மறு உத்தரவு வரும் வரை இந்த நிலையை தொடரலாம் என்றும் அந்த மனுவில் கூறியுள்ளது.

எனவே இன்று முதல் திரையரங்குகளில் திரையரங்க நிர்வாகிகள் விருப்பப்பட்டால் தேசிய கீதத்தை ஒலிக்க செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply