ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை: எண் கணித ஜோதிடர் கணிப்பு

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை: எண் கணித ஜோதிடர் கணிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை என்றும் அவர் இருபது ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்திருக்க வேண்டும் என்றும் 69 வயதில் அவர் அரசியலுக்கு வருவார் என்ற எண்ணம் யாருக்கும் தேவையில்லை என்றும் அவரது எண்கணித ஜோதிடப்படி அவர் இப்போதைக்கு அரசியலுக்கு வர வாய்ப்பில்லை என்றும் எண் கணித ஜோதிடர் ஒருவர் தெரிவித்துள்ளார்

ரஜினிகாந்த் பிறந்த தேதியின் கூட்டு தொகை மூன்று என்றும், இது குருவின் எண் என்றும், ரஜினிகாந்த் பெயரின் கூட்டுத்தொகை ஒன்று என்றும், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல போராட்டங்களை சந்தித்தவர் என்றும் கூறிய என் கணித ஜோதிடர் ரஜினிகாந்தின் தற்போதைய வயது கூட்டுத்தொகை ஆறு என்றும் இதுவும் குருவின் ஆதிக்கம் கொண்ட எண் என்பதால் இந்த வயதில் அவர் அரசியலுக்கு வர வாய்ப்பில்லை என்றும் கூறினார்
ஒருவேளை கடந்த 2019ஆம் ஆண்டு அவர் அரசியல் கட்சி தொடங்கி இருந்தால் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை பெற்றிருப்பார் என்றும் ஆனால் அதனை அவர் மிஸ் செய்துவிட்டார் என்றும், இன்னும் சில வருடங்களுக்கு அவர் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை என்று அவரது எண் கணித ஜோதிடம் கூறுவதாகவும் அந்த எண் கணித ஜோதிட தெரிவித்துள்ளார்

ரஜினிகாந்த் இன்னும் ஒரு சில மாதங்களில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் எண் கணித ஜோதிடரின் இந்த கணிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply