ரயிலில் செல்போன் சார்ஜ் செய்ய பயணிகளுக்கு புது கட்டுப்பாடு!

இதுவரை ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் பகல் இரவு என 24 மணி நேரமும் செல்போன் சார்ஜ் செய்துகொள்ளும் வசதி இருந்த நிலையில் தற்போது இரவில் மட்டும் சார்ஜ் செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது

இரவு நேரத்தில் சார்ஜ் செய்யப்படுவதால் ரயிலில் தீ விபத்து போன்ற விபத்துக்கள் ஏற்படுவதாகவும் எனவே இரவு 11 மணி முதல் மாலை 5 மணி வரை ரயிலில் செல்போன் சார்ஜ் பிளாக் பாயிண்டுக்கள் அனைத்தும் அணைத்து வைக்கப்படும் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது

இதனை அடுத்து மேற்கு ரயில்வே உள்பட ஒருசில ரயில்வேக்கள் இரவு 11 மணிக்கு மேல் சார்ஜ் செய்யும் பாயிண்டுக்கள் அனைத்தும் வைக்கப்படும் என கூறி உள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

Leave a Reply