shadow

தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி உள்ள நிலையில் ஒரு சில வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் வாக்குச்சாவடி ஒன்றில் சுயேச்சை வேட்பாளரின் சின்னத்தில் பட்டன் இல்லை என்பதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

திருமங்கலம் அருகே புதுப்பட்டி வாக்குச்சாவடியில் இயந்திரக் கோளாறால் வாக்குப்பதிவு தொடங்கவில்லை.

மதுராந்தகம் மாரிபுத்தூர் வாக்குச்சாவடியில் இயந்திரக் கோளாறால் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியுள்ளது.மதுரை மேற்கு தொகுதி வாக்குச்சாவடியிலும் வாக்கு இயந்திரம் வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *