இடைத்தரகர்களுக்கு ஆப்பு! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

இடைத்தரகர்களுக்கு ஆப்பு! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

தமிழக அரசில் உள்ள துறைகளில் அதிகளவு ஊழல் நடக்கும் துறை பத்திரப்பதிவுத்துறை தான் என எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும், பொதுமக்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக பத்திர அலுவலகங்களில் இடைத்தரகர்களின் அட்டுழியத்தால் பத்திரப்பதிவு செய்ய வரும் அப்பாவி பொதுமக்கள் படும் இன்னல்கள் சொல்லி மாளாது

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் இடைத்தரகர்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் முதல் சொத்து வாங்குபவர்கள், விற்பவர்கள் மட்டுமே சார்பதிவாளர் அலுவலகங்களில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இடைத்தரகர்கள் இனி அலுவலகத்திற்குள் நுழைய அனுமதி இல்லை என்றும் தமிழக அரசின் பதிவுத்துறை சார்பில் அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி கொடுத்திருந்தாலும் இனி பத்திரப்பதிவு துறையில் லஞ்சமே இருக்காதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply