புதிய தலைமை செயலகத்தில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை தொடங்க தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

ரூ.634 கோடி மதிப்பில் புதிய தலைமைச்செயலக கட்டிடத்தில் பல்வேறு நவீன வசதிகள் கொண்ட பல்நோக்க சிறப்பு மருத்துவமனை தயார் நிலையில் உள்ளது. இந்த மருத்துவமனை வரும் 21ஆம் முதல்வர் ஜெயலலிதாவால் திறக்கப்பட உள்ள நிலையில் நேற்று வழக்கறிஞர் வீரமணி என்பவர் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் தேசிய பசுமைத்தீர்ப்பாயம் விதித்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படவில்லை என்றும், எனவே, பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை திறப்பதற்கு தடை விதிக்கை வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தமிழக அரசின் தலைமை வக்கீர் சோமையாஜி இதற்கு பதிலளிக்கையில் புதிய மருத்துமனையில் அனைத்து விதிகளும் ஒழுங்காக பின்பற்றப்பட்டுள்ளது என்றும், மருத்துவமனைக்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள் புதிய தலைமைச் செயலக கட்டத்ததை மருத்துவமனையாக மாற்றத் தடை இல்லை என்று தீர்ப்பு அளித்தனர். எனவே வரும் 21ஆம் தேதி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பது உறுதியாகியுள்ளது.

Leave a Reply