கொரோனா வைரஸ் எதிரொலி: போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை

கொரோனா வைரஸ் பீதி காரணமாக ஐபிஎல், ஒலிம்பிக் உள்பட பல போட்டிகள் ஒத்தி வைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், போட்டிகள் நடந்தாலும் ரசிகர்களுக்கு அனுமதி இருக்காது என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரை, நேரில் கண்டுகளிக்க ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் மார்ச் 24ஆம் தேதி டெல்லியில் தொடங்கவுள்ள நிலையில் இந்திய பேட்மிண்டன் சங்கம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படிகொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பேட்மிண்டன் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply