பெங்களூரில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் நேற்று அவரது 37 வது பிறந்தநாள் கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடந்தது. இதில் கலந்துகொண்ட நடிகை ரஞ்சிதா, சன்னியாசியாக தீட்சை பெற்று, “மா ஆனந்தமயி” என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார்.

கடந்த 2010ஆம் ஆண்டு நித்தியானந்தா- ரஞ்சிதா சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய விடியோ ஒன்று தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக நித்தியானந்தா மீது ஏராளமான புகார்கள் கூறப்பட்டு, அவருக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டு அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் ரஞ்சிதா, பெங்களூரில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில்யே நிரந்தரமாக தங்கிவிட்டார். நேற்று நித்தியானந்தாவின் 37 வது பிறந்தநாளில் ஏராளமானோர் சன்னியாசியாக மாறும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதில் நடிகை ரஞ்சிதாவும் ஒருவர். தீட்சை பெற்ற பின்னர் ரஞ்சிதாவுக்கு “மா ஆனந்தமயி” என்ற பெயரை நித்தியானந்தா வைத்தார்.

மேலும் நித்தியானந்தாவின் பிறந்தநாள் விழாவை படம் பிடிக்க வந்த பத்திரிகையாளர் மீதும், போட்டோகிராபர்கள் மீது நித்தியானந்தா பக்தர்கள் சிலர் கல்லெறிந்ததால் பிறந்தநாள் விழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply