shadow

நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டுமா? இதை செய்யுங்கள்: தமிழ அரசுக்கு நிர்மலா சீதாராமன் யோசனை

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அரசு கைவிரித்துவிட்டாலும் கடைசியாக ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியபோது தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து இந்த ஒரு ஆண்டு மட்டும் விலக்கு வேண்டுமானால் தமிழக அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும். அந்த அவசர சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும், அதிலும் அரசு மருத்துவக்கல்லூரிகளில் மட்டுமே இது சாத்தியம் என்று கூறியுள்ளார்.

மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் இந்த யோசனையின்படி தமிழக அரசு அவசர சட்டம் இயற்றுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது போல் இந்த நீட் தேர்வுக்கு இந்த ஆண்டு மட்டும் விலக்கு அளிக்க மத்திய அமைச்சர் ஒருவரே யோசனை தெரிவித்திருப்பதை தமிழக அரசு பயன்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply