shadow

நிர்மலாதேவி வீட்டிற்கு சீல்: கணினி கைப்பற்றப்பட்டது

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் கணித பேராசிரியையாக இருந்த நிர்மலாதேவி, அக்கல்லூரியில் படிக்கும் மாணவிகளை தவறான பாதைக்கு கொண்டு செல்ல முயற்சித்தாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சிபிசிஐடி போலீசார் மற்றும் கவர்னர் நியமனம் செய்த ஓய்வுபெற்ற நீதிபதி சந்தானம் ஆகியோர் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று அருப்புக்கோட்டையில் உள்ள நிர்மலாதேவி வீட்டில் சோதனை நடந்தது. அவர் வீட்டில் இருந்த கணினி உள்பட ஒருசில ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்தனர்

பின்னர் 6 மணி நேரத்துக்கும் மேல் நடந்த சோதனை நிறைவடைந்ததால் வீட்டுக்கு போலீசார் சீல் வைத்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *