என்கவுண்டரை அடுத்து நிர்பயா வழக்கின் முக்கிய தகவல்

ஐதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நால்வரை போலீசார் சுட்டுக்கொன்று என்கவுண்டர் செய்துள்ள நிலையில் நிர்பயா கொலை வழக்கில் இன்னும் தண்டனை பெறாமல் இருக்கும் குற்றவாளிகள் குறித்த அதிரடி தகவல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது

நிர்பயா பலாத்கார குற்றவாளியின் கருணை மனுவை நிராகரிக்க மத்திய அரசு பரிந்துரை செய்திருப்பதாகவும், இதனையடுத்து குற்றவாளிக்கு விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்ற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

நிர்பயா வழக்கின் குற்றவாளியின் கருணை மனுவை நிராகரிக்குமாறு குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு பரிந்துரை செய்திருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம் பெண் நிர்பயா பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply