நிர்பயா வழக்கு – குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

டெல்லி திகார் சிறையில் நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடும் பணியை சரியாக 5.30 மணிக்கு பவன் ஜல்லாத் நிறைவேற்றினார். காலை 6 மணி வரை அதாவது 30 நிமிடங்கள் 4 பேரும் தூக்கிலிடப்பட்ட நிலையில் இருப்பார்கள் என்பதும் அதன்பின்னரே உடல்கள் உரியவரிடம் ஒப்படைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது

அடுத்தடுத்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடியான நிலையில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உறுதியானது என்பது தெரிந்ததே. கடந்த 2012 டிசம்பரில் நடைபெற்ற குற்ற சம்பவத்திற்கு 2020 மார்ச் மாதம் தண்டனை நிறைவேற்றப்பட்டு முடிவுக்கு வந்துள்ளது

Leave a Reply