ஜெயம் ரவி, அமலாபால், சூரி நடித்த நிமிர்ந்து நில் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆவதாக இருந்தது. திடீரென படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
nimirnthu-nil-release-delayed
சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து தியேட்டர்களிலும் நிமிர்ந்து நில் படத்தின் இன்றைய காலைக்காட்சி ரத்து செய்யப்பட்டது. படத்தின் தயாரிப்பாளர் படம் சம்மந்தமான பணம் கொடுக்கல் வாங்கலில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் படம் ரிலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சென்னையில் தயாரிப்பாளர் படத்தை ரிலீஸ் செய்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால், பகல்காட்சி முதல் நிமிர்ந்து நில் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

நேற்று துபாய் மற்றும் அமெரிக்க நாடுகளிலும் பட ரிலீஸ் ரத்து செய்யப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.  நிமிர்ந்து நில் படத்தை சமுத்திரக்கனி இயக்கியுள்ளார். ஜெயம் ரவி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக அமலாபாலும், காமெடி வேடத்தில் சூரியும் நடித்துள்ளனர்.

படம் ரிலீஸ் தாமதமாகியுள்ளதால் ஜெயம் ரவி ரசிகர்களும்,, முதல் காட்சிக்கு ரிசர்வ் செய்தவர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”//bit.ly/1qdOa2v” standard=”//www.youtube.com/v/lyt6tNFnRUE?fs=1″ vars=”ytid=lyt6tNFnRUE&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep9876″ /]

Leave a Reply