பொதுமக்கள் அதிருப்தி

ஏப்ரல் 20 முதல் ஓரளவுக்கு ஊரடங்கு தளர்த்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கூறிய நிலையில் இன்று அதிகாலை முதல் ஒருசில ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டன அவற்றில் முதலாவதாக நேற்று நள்ளிரவு முதல் அனைத்து டோல்கேட்களும் இயங்க ஆரம்பித்துள்ளன

டோல்கேட்டுகளுக்கு வரும் வாகனங்களுக்கு கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. தற்போது அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டுமே தற்போது இயங்கி கொண்டிருக்கும் நிலையில் டோல்கேட் வசூல் செய்வது என்பது மக்களை பாதிக்கும் செயல் என லாரி உரிமையாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் ஊரடங்கு தளர்த்துவதில் முதல்படியாக டோல்கேட் கட்டணத்தை வசூல் செய்ய மத்திய அரசு அனுமதி தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பைப் பொருட்படுத்தாது மத்திய அரசு கட்டணங்களை வாங்க முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply