வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த சில தினங்களுக்கு முன் நாகப்படினம் அருகே கரையை கடந்தது. இந்த நிலையில், தற்போது மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறி வருகிறது.

இந்த புயல் சின்னம் தமிழகத்தை நெருங்கி வருவதால், புதுச்சேரி கடலூர், மற்றும் நாகைதுறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து 650 கிமீ தொலைவில் புதிய காற்றழுத்து தாழ்வு நிலை நிலைகொண்டுள்ளது. இது புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல்சின்னம் காரணமாக தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்றும், வட தமிழகத்திலும் புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ள்தாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply