இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியின் மெக்கல்லம், வாட்லிங் ஆகியோர்களின் சிறப்பான ஆட்டத்தால் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

இன்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தின் முடிவில் நியுசிலாந்து அணி 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்தது. மெக்கல்லம், 114 ரன்களுடனும், வாட்லிங் 52 ரன்களுடனும் ஆட்டமிழக்கமல் உள்ளனர். இந்திய அணியை விட 6 ரன்கள் அதிகமுள்ள நியூசிலாந்து அணியின் நாளைய ஆட்டத்தை பொறுத்தே இந்த டெஸ்ட் போட்டியின் முடிவு தெரியும். முன்னதாக முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 192 ரன்களும், இந்திய அணி 438 ரன்களும் எடுத்துள்ளது.

Leave a Reply