முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ஆரம்பத்திலேயே அதிர்ச்சியான இந்திய அணி

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ஆரம்பத்திலேயே அதிர்ச்சியான இந்திய அணி

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரம்பத்திலேயே அவுட்டாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது

தொடக்க ஆட்டக்காரர் பிபி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் 20 மற்றும் 32 ரன்கள் எடுத்த நிலையில் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர்

இதனையடுத்து தற்போது கோஹ்லி மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் முழு வெற்றியை பெற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை வீரர்கள் பூர்த்தி செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply