இந்தியாவுக்கு நியூசிலாந்து அணிக்கும் இடையே நடந்த விறுவிறுப்பான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

வெற்றி பெற 407 ரன்கள் தேவை என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய இந்திய அணி இன்று நடந்த இறுதிநாள் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 366 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தவான் 115 ரன்களும், விராத் கோஹ்லி 67 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் வாக்னர் அபாரமாக பந்துவீசி நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா 0-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. முதல் இன்னிங்ஸில் 224 ரன்கள் எடுத்த மெக்கல்லம் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

முழு ஸ்கோர் விபரம்:

நியூசிலாந்து – 503 மற்றும் 105

இந்தியா – 202மற்றும் 366

Leave a Reply