இந்தியா, நியூசிலாந்து அணிகளூக்கு இடையே நடந்தத இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராத் கோஹ்லியின் சதத்தால் இந்திய அணி தோல்வியில் இருந்து தப்பியது. இருப்பினும் முதல் டெஸ்ட்டில் தோல்வியுற்று இருந்ததால் தொடரை இழந்தது.

கடந்த 14ஆம் தேதி வெல்லிங்டன் நகரில் ஆரம்பித்த இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் தோனி, டாஸ் வென்று முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 192 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. பின்னர் ஆடிய இந்திய அணி தவான், ரஹானே ஆகியோரின் அற்புதமான ஆட்டத்தால் 438 ரன்கள் எடுத்தது.

அடுத்த இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி, இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது. மெக்கல்லம் அடித்த 302 ரன்கள், மற்றும் வாட்லிங், நீஷம் ஆகியோரின் சதத்தால், நியூசிலாந்து அணி 680 ரன்கள் குவித்தது. வெற்றி பெற 435 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய இந்திய அணி, ஆட்ட நேர முடிவின்போது 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. விராத் கோஹ்லி 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்டம் டிராவில் முடிவுக்கு வந்தது.

302 ரன்கள் குவித்த மெக்கல்லம் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு டெஸ்டுக்கள் கொண்ட இந்த போட்டி தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1bgs2jA” standard=”//www.youtube.com/v/kfHnngr_q_o?fs=1″ vars=”ytid=kfHnngr_q_o&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep2684″ /]

Leave a Reply