shadow

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கான்பூரில் முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 345 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது

இந்த நிலையில் முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணி 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அக்சர் பட்டேல் மிக அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அஸ்வின் 3 விக்கெட்டுக்களையும் ஜடேஜா, உமேஷ் யாதவ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி உள்ளனர்

தற்போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.