shadow

1.5 லட்சம் பசுக்களை கொல்ல முடிவா? அதிர்ச்சியில் பால்பண்ணை முதலாளிகள்

உலகிலேயே பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான நியூசிலாந்து உலகின் மொத்த பால் உற்பத்தில் 3 சதவீதம் உற்பத்தி செய்து வருகிறது. நியூசிலாந்தில் மட்டும் சுமார் 66 லட்சம் பசு மாடுகள் உள்ளதாக ஒரு தகவல் கூறுகின்றது.

இந்த நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு பசுக்களுக்கு நிமோனியா போன்ற நோய்களை உண்டாக்கும் மைக்கோபிளாஸ்மா போவிஸ் எனப்படும் பாக்டீரியா தாக்கியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பாக்டீரியாவினால், நியூசிலாந்தின் முக்கியதொழில் வளமான பால்வளம் மற்றும் கால்நடை உற்பத்தியை கடுமையாக பாதிக்கும் என்று எச்சரிக்கப்பட்டது. இதனையடுத்து மாட்டுப்பண்ணைகளில் பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்ட பசுக்களையும் கொல்ல நியூசிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. இந்த பசுக்களை கொன்று, எரித்தால் பாக்டீரியா தாக்காத பசுக்களை காப்பாற்ற முடியும் என்று கூறப்படுகிறது. எனவே பாக்டீரியாவால் தாக்கப்பட்ட சுமார் 1,50,000 பசுக்களை கொல்ல நியூசிலாந்து அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவால் பால்பாண்ணை முதலாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விளக்கம் அளித்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் ‘இது போன்ற பசு ஒழிப்பு நடவடிக்கையை யாரும் விரும்பவில்லை என்றாஅலும்,ம் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால், நியூசிலாந்து நாட்டின் கால்நடை வளம் முற்றிலும் அழிந்து விடும். இதற்கு உடனே நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், நாட்டில் உள்ள 2000 பால் பண்ணைகள் மற்றும் மாட்டிறைச்சி நிலையங்களை காக்க முடியாமல் போய்விடும் என்று கூறினார்

Leave a Reply