shadow

இந்தியாவுக்கு வரும் நியூசிலாந்து அணியின் கேப்டன் மாற்றம்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஒரு நாள் தொடர் ஜனவரி 18ஆம் தேதி தொடங்க உள்ளது. அதேபோல் ஜனவரி 27ஆம் தேதி முதல் டி20 தொடங்க உள்ளது

இந்த நிலையில் இந்திய தொடரில் இருந்து வில்லியம்சன் மற்ற்ம் டிம் செளதி ஆகிய இருவரும் விலகியுள்ளனர்., இதனை அடுத்து இந்தியா வரும் நியூஸிலாந்து அணியின் கேப்டனாக சாண்ட்னர் நியமனம் செய்திருக்கிறார்

நியூசிலாந்து அணியின் முழு விவரம்: மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), பின் ஆலென், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டேன் கிளவர், டேவோன் கான்வே, ஜாகோப் டப்பி, லக்கி பெர்குசன், பென் லிஸ்டர், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் ரிப்பன், ஹென்றி சிப்லே, இஷ் சோதி, பிளேர் டிக்னர்.

போட்டியின் விபரங்கள்:

ஜனவரி 18 – இந்தியா – நியூசிலாந்து – முதல் ஒரு நாள் போட்டி – ஹைதராபாத்

ஜனவரி 21 – இந்தியா – நியூசிலாந்து – 2ஆவது ஒரு நாள் போட்டி – ராய்பூர்

ஜனவரி 24 – இந்தியா – நியூசிலாந்து – 3ஆவது ஒரு நாள் போட்டி – இந்தூர்

ஜனவரி 27 – இந்தியா – நியூசிலாந்து – முதல் டி20 போட்டி – ராஞ்சி

ஜனவரி 29 – இந்தியா – நியூசிலாந்து – 2ஆவது டி20 போட்டி – லக்னோ

பிப்ரவரி 01 – இந்தியா – நியூசிலாந்து – 3ஆவது டி20 போட்டி – அகமதாபாத்