கேப்டன் டபுள் சென்சுரி, கான்வே செஞ்சுரி: நியூசிலாந்து அபார பேட்டிங்!

நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் இடையே கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்று வரும்
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 521 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

நியூசிலாந்து அணியின் கேப்டன் லாதம் 252 ரன்களும் கான்வே 109 ரன்கள் எடுத்தனர்

இந்த நிலையில் வங்கதேச அணியின் முதலாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 11 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் இன்னிங்ஸ் தோல்வி அடைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.