இந்தியா ,நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்து வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருக்கிறது.

முதல் 13 ஓவர்களில் 30 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்து கொண்டிருந்த நியூசிலாந்து, வில்லியம்சன், மெக்கல்லம் ஆகியோர்களின் அதிரடி சதங்களால் வலுவான ஸ்கோரை எட்டியது. வில்லியம்சன் 113 ரன்களூம், மெக்கல்லம் ஆட்டமிழக்காமல் 143 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஜாகீர்கான், மற்றும் இஷாந்த் சர்மா தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார்.

Leave a Reply