இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடந்து வருகிறது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் நியூசிலாந்து அணியை பேட் செய்யுமாறு அழைத்தார். எனவே தற்போது நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. சற்று முன் வரை நியூசிலாந்து அணி 41 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 127 ரன்கள் எடுத்துள்ளது.

ஃபல்டன், ரூதர்போர்டு, டெய்லர் ஆகிய மூன்று நியூசிலாந்து வீரர்கள் ஆட்டமிழந்துள்ளனர்.  வில்லியம்சன் 53 ரன்களுடனுடம், மெக்கல்லம் 47 ரன்களுடன் விளையாடி வருகின்றனர். இந்திய அணி தரப்பில் இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுக்களையும், ஜாகீர் கான் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

இந்திய அணியில் கேப்டன் தோனியுடன் எம்.விஜய், தவான், புஜாரா, ரோஹித் சர்மா,விராத் கோஹ்லி, ரஹானே, ஜடெஜா, முகம்மது ஷமி, ஜாகீர் கான், இஷாந்த் சர்மா ஆகியோர் அணியில் உள்ளனர்.

Leave a Reply