புத்தாண்டுக்கு முந்தைய தினத்திலும், புத்தாண்டு தினத்திலும் சேர்ந்து ரூ.270 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளதாக டாஸ்மாக் அதிகாரி இன்று விடுத்த ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும், டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கம். அதுபோலவே இந்த புத்தாண்டிலும் ரூ.170 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடக்கும் என டாஸ்மாக் எதிர்பார்த்திருந்தது. ஆனால் அதற்கும் மேலாக ரூ.250 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டுக்கு முந்தைய நாளில் ரூ.150கோடிக்கும் புத்தாண்டு தினத்தில் ரூ.120 கோடிக்கும் விற்பனை நடந்துள்ளதாகவும் இது சென்ற ஆண்டைவிட ரூ.90கோடி அதிகம் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.  மேலும் இந்த தொகைக்கு மதுவிற்பனை எந்த புத்தாண்டு தினத்தன்றும் நடந்ததில்லை.
தமிழகத்தில் சென்னையில்தான் மிக அதிகமாக டாஸ்மாக்கில் மது விற்பனை நடந்துள்ளது. கோவை, மதுரை முதலிய நகரங்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளது.

சென்னையில் அரசு நடத்தி வரும் எலைட் ஷாப்பிங் மால் மதுவிற்பனை நிலையங்களில் ரூ.40 லட்சத்திற்கு மதுவிற்பனை நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வரும் பொங்கல் தினத்தன்றும் விற்பனை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply