shadow

உலகம் முழுவதுமே அதிகளவில் பயன்படுத்தப்படும் செயலியாக வாட்ஸ்-அப் இருக்கிறது. வாட்ஸ் அப் செயலியில் அவ்வப்போது புதிது புதிதாக அப்டேட்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில், வாட்ஸ்-அப் செயலியில், அடுத்த புதிய அப்டேட் அறிமுகப்படுத்தப்பட சோதனை முயற்சியில் இருக்கிறது. இந்த புதிய அப்டேட் குறித்த செய்தி, வாட்ஸ்-அப் பயனாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ்-அப்பில் தற்போது அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த புதிய அப்டேட்டின் மூலம் வாய்ஸ் நோட்களை ஸ்டேட்டசில் வைக்க முடியும். இந்த வாய்ஸ் ஸ்டேட்டஸ் அம்சம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

வாடிக்கையாளர்கள் ஸ்டேட்டஸ் டேப்பின் கீழே தரப்பட்டுள்ள புதிய ஐகானை கிளிக் செய்தால் போதும், வாய்ஸ் நோட்களை ஸ்டேட்டசாக வைத்து மகிழலாம்.