shadow

வெளிநாடுகளில் வைரலாகும் இருமுகன் டாட்டூ

கடந்த சில வருடங்களாக உடல் உறுப்புகளில் டாட்டு வரையும் வழக்கம் அதிகமாகி வருகின்றது. தனக்கு பிடித்த நடிகர்கள், காதலன், காதலி பெயர்கள் உள்பட பல்வேறு டாட்டுக்கள் பிரபலமாக உள்ளது.

இந்நிலையில் தற்போது மேற்கத்திய நாடுகளில் முகத்தில் முகம் வரையும் டாட்டுக்கள் பிரபலமாகி வருகிறது. நம்முடைய முகத்தில் நமது முகத்தின் உருவத்தையே வரைவதுதான் இப்போதைய டிரண்ட்.

ஒரே முகத்தில் இருமுகத்தை பார்க்கும் இந்த புதிய வகை டாட்டூ வெளிநாடுகளில் வைரலாகி வரும் நிலையில் கூடிய விரைவில் இந்தியா போன்ற ஆசிய நாடுகளிலும் பரவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply