கொரோனாவை அடுத்து உருமாறிய ஒமிக்ரான்: 21 பேர் பாதிப்பு

கொரோனா வைரஸ் டெல்டா உள்பட பல்வேறு வடிவங்களில் உருமாறிய நிலையில் ஒமிக்ரான் வைரசும் உருமாறியுள்ளது.

இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியாவில் திடீரென ஒமிக்ரான் வைரஸ் புதிய வகையில் உருமாறியுள்ளது.

பி.ஏ 2 என்ற புதிய வகையில் ஒமிக்ரான் வைரஸால் மத்திய பிரதேசத்தில் உள்ள 6 குழந்தைகள் உள்பட 21 பேர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

புதிய வகை ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.