shadow

தமிழக அரசு ஒத்துழைத்தால் சென்னை-கன்னியாகுமரி கடல் வழிரயில் பாதை – அமைச்சர் சுரேஷ் பிரபு

சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை ஏற்கனவே கப்பல் போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த நிலையில் தற்போது சென்னை-கன்னியாகுமரி இடையில் கடல் வழியாக இருப்புப் பாதை அமைக்கப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பல்வேறு ரயில்வே திட்டங்கள் தொடங்கிவைக்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய மாநில அமைச்சர்களுடன் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் அவர்களும் கலந்து கொண்டார்.

சென்னை-திருவொற்றியூர் இடையிலான நான்காவது ரயில் பாதையை திறந்துவைத்து பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, ‘வேளச்சேரி-பரங்கிமலை இடையிலான ரயில் பாதை 18 மாதங்களில் முடிவடையும் என்றும்,  சென்னை கன்னியாகுமரிக்கு இடையில் கடல் வழியாக இருப்புப் பாதை விரைவில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் இருப்புப் பாதை அமைப்பதற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்’ என்று தெரிவித்தார். இந்த விழாவில் தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார்.

Leave a Reply