புதிய தமிழக பாஜக தலைவர்: யார் இவர்?

புதிய தமிழக பாஜக தலைவர்: யார் இவர்?

தமிழக பாஜக புதிய தலைவராக ராமநாதபுரத்தை சேர்ந்த குப்புராமு தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரும் என்று பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

கடந்த 1986 முதல் 2006 வரை பட்டினம்காத்தான் ஊராட்சி மன்ற தலைவராகவும், பாஜக துணைத் தலைவராகவும் பின் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாநிலத் தலைவராகவும் பதவி வகித்தவர் குப்புராமு என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மாநில அளவில் புகழ் பெறாத ஒருவரை பாஜகவின் தமிழக தலைவராக தேர்வு செய்வதா? என பாஜக பிரமுகர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது

ஆனால் குப்புராமு கட்சியின் விசுவாசி என்றும் இவரது தலைமையில் பாஜக தமிழகத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பெறும் என்றும் பாஜக வட்டாரத்தில் பலர் கூறி வருகின்றனர்.

 

Leave a Reply