தமிழ் சினிமாவில் இனி தயாரிப்பாளருக்கு நஷ்டம் இல்லை:

உருவாகிறது புதிய முயற்சி

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் ஒருவரே இதுவரை நஷ்டம் அடைந்து வந்த நிலையில் புதிய திருப்பமாக இனிமேல் எந்தவொரு தயாரிப்பாளரும் நஷ்டம் அடையாத வகையில் புதிய முயற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது

இதன்படி நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என யாருக்கும் சம்பளம் கிடையாது. லாப சதவிகிதம் மட்டுமே. படம் முடிந்தவுடன் அந்த படத்தின் வியாபாரத்தில் கிடைக்கும் மொத்த தொகையில் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட சதவிகித பணம் கொடுக்கப்படும்

இந்த புதிய முயற்சிக்கு ஒப்புக்கொண்டு கே.எஸ்.ரவிகுமார் படத்தை இயக்கவு, விஜய்சேதுபதி, பார்த்திபன், சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளனர். சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்பி செளத்ரி இந்த படத்தை தயாரிக்கவுள்ளார். படப்பிடிப்பு மற்றும் பிற செலவுகள் என இவர் ரூ.2 கோடி மட்டுமே செலவு செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முயற்சி வெற்றி பெற்றால் கோலிவுட் ஒரு புதிய திருப்பதை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply