shadow

ration cardபாராளுமன்ற தேர்தலை ஒட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய குடும்ப அட்டை விநியோகம் வரும் ஜூன் மாதம் முதல் மீண்டும் வழங்கப்பட உள்ளதாக குடிமைப்பொருள் துறை அறிக்கை ஒன்றில் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து நடத்தை விதி அமலில் இருந்ததால், புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் வாக்குப்பதிவு கடந்த 24 ஆம் தேதி முடிந்த நிலையில், நடத்தை விதிகளை தளர்த்தி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து, புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்களின் மனுக்களை பரிசீலனை செய்யும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அச்சிடும் பணி முடிந்தவுடன் ஜுன் மாதத்தில் புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் பணி நடைபெறும்” என்று கூறப்படுகிறது.

மே மாதம் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதால் அதன்பின்னர் புதிய குடும்ப அட்டை அட்டைக்கான விண்ணப்பங்களும் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply