shadow

வங்கக் கடலில் மீண்டும் புயல்: சென்னையில் வெளுத்து கட்டப்போகும் மழை

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இதனையடுத்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது

இந்த நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் நல்ல மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.