மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் சத்யா நாதெள்ளா அவர்களின் பேட்டி, மைக்ரோசாப்ட் நிறுவன இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் தன்னால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மிகப்பெரிய அளவில் சாதிக்க முடியும் என்று கூறியுள்ளார்.
சத்ய நாதெள்ளாவின் பேட்டியில் இருந்து சில முக்கிய குறிப்புகள்:
இந்த பதவிக்கு வருவதாக சில ஆண்டுகளாக ஆசைப்பட்டேன். அந்த ஆசை தற்போது நிறைவேறியிருக்கிறது.
மனித சக்தியால் முடியாத செயல் எதுவுமே இவ்வுலகில் இல்லை. எங்கள் நிறுவனத்தின் 13 லட்சம் ஊழியர்களின் உதவியால் உலக மக்களுக்கு பல நன்மைகளை எங்களால் கொடுக்க முடியும்.
புதிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவமும், வர்த்தகத்டை பலமடங்கு பெருக்குவதற்கும் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்,.
வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும், ஏதாவது ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொள்ளும் மாணவனாக இருக்க விரும்புகிறேன்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய தலைவர் சத்யா நாதெள்ளா 46 வயது ஆனவர். இவர் இந்நிறுவனத்தில் கடந்த 22 ஆண்டுகளாக பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார். தற்போது இவருடைய சம்பளம் ஆண்டுக்கு ரூ.112 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர் என்பது பலருக்கு தெரியாத தகவல்.