shadow

சிரியா தாக்குதலில் காயமடைந்த சிறுவன்: அன்றும் இன்றும்

சிரியாவில் கடந்த சில ஆண்டுகளாக அதிபர் ஆசாத் ஆட்சிக்கு எதிராக ஐஎஸ்.ஐ தீவிரவாதிகளும் ஒருசில அமைப்புகளும் போராட்டங்களையும் தீவிரவாத தாக்குதல்களையும் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தீவிரவாதிகள் அலேப்போ என்ற நகரில் நடத்திய ஒரு தாக்குதலில் 5 வயது ஓம்ரான் என்ற சிறுவன் தனது 10 வயது சகோதரனை பலிகொடுத்துவிட்டு பரிதாபமாக உட்கார்ந்திருந்த புகைப்படம் ஒன்று உலகையே உலுக்கியது. சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவிய இந்த புகைப்படம் அந்த நாட்டின் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ரஷ்ய அரசும், அரசுக்கு ஆதரவாக அமெரிக்க அரசும் செயல்பட்டு வருவதால் இன்று வரை சிரியாவில் உள்நாட்டு போர் நடந்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில் சிறுவன் ஓம்ரான் தற்போது காயங்களில் இருந்து முழு குணம் அடைந்து சமீபத்தில் தொலைக்காட்சியில் தோன்றினான். அவனுடன் இருந்து தந்தை தொலைக்காட்சி பேட்டியில் கூறியபோது, ‘நாங்கள் அலேப்போவை விட்டு வெளியேற மாட்டோம். இங்குதான் வாழ விரும்புகிறோம். என் மகன் ஓம்ரான் குணமடைந்துவிட்டான். அதிபர் ஆசாத் படையினரின் பாதுகாப்பில் உள்ளோம்” என்று கூறினார்.

Leave a Reply