தங்கம்மாள் மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக சி.தங்கம்மாள் தயாரிக்கும் “ஞானகிறுக்கன்”  வித்தியாசமான கதையோட்டத்தைக் கொண்டது.வித்தியாசமான கோணம் கொண்ட இந்த படத்தை இளையதேவன் கதை , திரைக்கதை , வசனம் எழுதி இயக்குகிறார்.

டேனியல் பாலாஜி ஞானகிருக்கனாக கணேசன் என்ற கதாபாத்திரம் ஏற்கிறார்.

அவரது மனைவியாக செந்தி நடிக்கிறார். ஜெகா என்ற புதுமுகம் கதாநாயகனாகவும் , அர்ச்சனாகவி ,சுஷ்மிதா நடிக்கிறார்கள்.

மற்றும் தம்பிராமய்யா, செவ்வாளை, உமா, கலைச்செல்வி, சீனியம்மா, விஜயம்மாள் ஆகியோர் நடிக்கிறார்கள் . மாஸ்டர் சீனிவாசன் முக்கிய வேடமேற்கிறார்.

ஒளிப்பதிவு    –   எஸ். செல்வகுமார்

இசை   –   தாஜ்நூர்

பாடல்கள்  –   நா.முத்துகுமார், அறிவுமதி, கபிலன், யுகபாரதி, மோகன்ராஜன்

கலை   –  ஆர். முரளி .

நடனம்  –    தினேஷ் , ஸ்ரீதர் , தம்பிசிவா

எடிட்டிங்    –  ராஜாமுகம்மது .

ஸ்டன்ட்   –   நாக்அவுட் நந்தா

தயாரிப்பு மேற்பார்வை   –   எம்.அருள்.

தயாரிப்பு நிர்வாகம் –  வேல்ராஜன்

தயாரிப்பு  –  சி.தங்கம்மாள்

படம் பற்றி இயக்குனர் இளையதேவன்…..

இந்த படத்திற்காக  சமீபத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள எனாம்கிளியூர் என்ற கிராமத்தில்

“கண்ணீரை எடை போட  எவருமில்லை – கை

தந்து கரை சேர்க்க துணையும் இல்லை ! என்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

டேனியல் பாலாஜி – செந்தி , மாஸ்டர் மணிமாறன் பங்கேற்றனர் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு அந்த கிராமத்தில் நடந்த உண்மை சம்பவம் என்பதால் ஞானகிறுக்கன் படத்தின் அந்த பாடல் காட்சியைப் பார்த்து நிறைய மக்கள் அழுது விட்டார்கள். ஒரு உண்மை சம்பவத்தை கருவாக எடுத்து கற்பனை கலக்காமல் படமாக்கி முடித்திருக்கிறேன் என்கிறார் இயக்குனர் இளையதேவன்.

 

Leave a Reply