shadow

whatsapp-ready-350x250

பிரபல சமூக வலைத்தளமான வாட்ஸ் ஆப் 3 புதிய வசதிகளுடன் கூடிய அப்டேட்களை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வசதிகளை அப்டேட் செய்யப்பட்ட லேட்டஸ்ட் பதிப்பான V.2.12.194 -ஐ டவுண்லோடு செய்து பெறலாம்.

3 புதிய வசதிகளின் விபரம் பின்வருமாறு:-

மெசேஜ்களை நீங்கள் விரும்பும் போது படித்துக் கொள்ளும் வசதி

நமக்கு வரும் மெசேஜ்களை நாம் விரும்பும் போது படிக்கும் வகையில் Mark as Unread option வசதியை வழங்கியிருக்கிறது வாட்ஸ் ஆப். இந்த வசதியை பெற உரையாடல்களில் லாங் பிரஸ்ஸிங் செய்தால் archive chat, delete chat, email chat options-க்கு அடுத்ததாக Mark as Unread என்ற மெனு தோன்றும்.

விருப்பத்திற்கு ஏற்றவாறு நோட்டிபிக்கேஷன்களை மாற்றிக் கொள்ளும் வசதி

மற்றொரு புதிய வசதியாக நமது விருப்பத்திற்கு ஏற்றவாறு மெசேஜ் நோட்டிபிக்கேஷன்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் புதிய வசதியை தந்திருக்கிறது வாட்ஸ் ஆப். சாட் செட்டிங்ஸில் சென்று tones, vibration length, light, popup notifications, call ringtone உள்ளிட்ட வசதிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் இப்போது contact அல்லது group-ல் ஒவ்வொன்றுக்கும் வேவ்வேறு வகையான நோட்டிபிக்கேஷன்களை வைத்துக் கொள்ளலாம். இதுதவிர mute chat. வசதியும் தரப்பட்டுள்ளது.

குறைந்த இண்டர்நெட் டேட்டாவில் அதிக வாட்ஸ் ஆப் ஒருவேளை இண்டர்நெட் டேட்டா பேலன்ஸ் குறைவாக இருக்கும் பட்சத்தில் வாய்ஸ் கால்களை மிகக்குறைந்த டேட்டாவிலேயே பயன்படுத்தக் கூடிய அளவிற்கு புதிய அப்டேட்டை வழங்கியிருக்கிறது வாட்ஸ் ஆப். மேலும், வாட்ஸ் ஆப் உரையாடல்களில் எவ்வளவு இண்டர்நெட் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள முடியும். இந்த வசதியை WhatsApp settings-ல் பெறலாம்.

இந்த 3 புதிய வசதிகளும் ஆன்ட்ராய்டு மட்டுமின்றி ஆப்பிள் ஐ.ஓ.எஸ், விண்டோஸ், பிளாக்பெர்ரி மற்றும் சிம்பியன் ஆகிய இயங்குதளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில், வாட்ஸ் ஆப் உரையாடல்களை கூகுள் டிரைவில் நேரடியாக பேக்அப் எடுத்துக் கொள்ளும் புதிய வசதியும் வரவுள்ளது.

Leave a Reply