காய்கறி கடைகளையும் திறக்க கட்டுப்பாடு விதித்த தமிழக அரசு!

காய்கறி கடைகளையும் திறக்க கட்டுப்பாடு விதித்த தமிழக அரசு!

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி வருவதை அடுத்து 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. ஆனாலும் காய்கறிகள், மளிகை கடைகள், பால் மற்றும் மருந்து கடைகள், பெட்ரோல் பங்குகள் ஆகியவை இன்று வரை திறந்திருந்தன

ஆனால் வரும் ஞாயிறு முதல் புதிய உத்தரவு அமலுக்கு வருவதாக தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.

இதன்படி ஞாயிறு முதல் மளிகை கடைகள், காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும்

பெட்ரோல் பங்குகளும் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே இயங்கும்

மருந்தகங்கள் உணவகங்கள் நாள் முழுவதும் இயங்கும். உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும்

இவ்வாறு தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளதால் மளிகை, காய்கறி தேவைப்படுவோர் மதியம் 2.30க்குள் வாங்கி கொள்ளவும்

Leave a Reply