shadow

மிகப்பெரிய மலையை 11 அடி நகர்த்திய வடகொரியா? ஏன் தெரியுமா?

அணு ஆயுத சோதனைகளை அவ்வப்போது நடத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த வடகொரியா தற்போது சமாதானப்பாதையை நோக்கி திரும்பியுள்ளது. விரைவில் வடகொரியா மற்றும் அமெரிக்க அதிபர்கள் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இந்த நிலையில் வடகொரியா அணு ஆயுத சோதனை செய்வதற்காக ‘மேண்டேப்’ மலையில் புங்கேரி அணு ஆயுத சோதனைக் கூடம் அமைத்துள்ளது. இங்கு கடந்த செப்டம்பர் மாதம் தொடர்ச்சியாக ஆயுத சோதனை நடத்தப்பட்டது.

முதலாவது அணு ஆயுத சோதனை நிகழ்த்தப்பட்ட போது 6.3 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டது. 2வது முறை சோதனை செய்த போது 4.1 ரிக்டர் அதிர்வு உருவானது. இந்த சோதனை ஜப்பானில் நாகசாகி நகரில் வீசப்பட்ட அணுகுண்டு போல 10 மடங்கு சக்திவாய்ந்தது என ஆய்வாளர்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர்.

இதனால் சோதனை செய்யப்பட்ட ‘மேன்டேப்’ மலை 11.5 அடி தூரம் தெற்கு நோக்கி நகர்ந்துள்ளதாகவும், சுமார் 1.6 அடி பூமிக்குள் இறங்கியுள்ளதாகவும் ரேடார் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Leave a Reply