தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் : புதிய நிர்வாகிகள் யார் யார்?

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் : புதிய நிர்வாகிகள் யார் யார்?

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்துக்கான தேர்தல், சென்னை வடபழனியில் உள்ள இசையமைப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் கெள்ரவ தலைவராக இயக்குனர் விக்ரமன், தலைவராக இயக்குனர் கே.பாக்யராஜ், செயலாளராக இயக்குனனர் மனோஜ்குமார், பொருளாளராக நடிகர் ரமேஷ் கண்ணா, துணைத் தலைவர்களாக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, யார் கண்ணன், இணை செயலாளர்களாக சண்முகசுந்தரம், ரங்கநாதன், பிரபாகர், மதுரை தங்கம் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் 12 செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் சின்னி ஜெயந்த், பேரரசு, மனோபாலா, ஏ.வெங்கடேஷ், விவேகா உள்பட 15 பேர் போட்டியிட்டனர். அதில், பேரரசு, மனோபாலா, ஏ.வெங்கடேஷ், அரிராஜன், லியாகத் அலிகான், சின்னி ஜெயந்த், பாலசேகரன், யுரேகா, ஹேமமாலினி, விவேகா, கண்மணி ராஜா, சாய்ரமணி ஆகிய 12 பேரும் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யபப்ட்ட அனனவரும் உடனே பதவியேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply