தமிழகத்தில் புதியதாக 500 கலைஞர் உணவகங்கள்!

தமிழகத்தில் 500 கலைஞர் உணவகங்கள் புதியதாக திறக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் அம்மா உணவகங்கள் கடந்த ஜெயலலிதாவின் ஆட்சியில் தொடங்கப்பட்டது

தமிழகத்தில் ஏற்கனவே 650 அம்மா உணவகங்கள் இருக்கும் நிலையில் கூடுதலாக 500 உணவகங்கள் அமைக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தெரிவித்துள்ளார்.

புதிதாக அமைக்கப்படும் 500 உணவகங்களுக்கு கலைஞர் உணவகங்கள் என பெயர் சூட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.