தமிழகத்தில் 1,000 புதிய பஸ்கள்: ரூபாய் 420 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் 1,000 புதிய பஸ்கள்: ரூபாய் 420 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் புதிதாக ஆயிரம் பேருந்துகள் வாங்குவதற்கு 420 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

விழுப்புரம் சேலம் கோவை மதுரை கும்பகோணம் நெல்லை ஆகிய இடங்களுக்கு புதிய பேருந்துகள் வழங்கப்பட உள்ளதாகவும் ஒரு பேருந்துக்கு 42 லட்சம் என மதிப்பீடு செய்து 120 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

மாநகர போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் இதர கோட்டங்களுக்கு இந்த புதிய பேருந்துகள் பகிர்ந்தளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

பேருந்துகள், தமிழக அரசு, அரசாணை,