தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல்: நெட்டிசன்கள் கிண்டல்

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல்: நெட்டிசன்கள் கிண்டல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக பல அணிகளாக பிரிந்தபோது ஆரம்பத்தில் இருந்தே தினகரனின் ஆதரவாளராக இருந்தவர் நாஞ்சில் சம்பத். அரசியலில் தினகரன் ஒரு ராஜதந்திரி என்றும், எம்ஜிஆர், ஜெயலலிதாவை விட தினகரன் ஆற்றல் மிகுந்தவர் என்றும் பேசி வந்தார். அவரை பற்றி மற்ற தலைவர்களும், நெட்டிசன்களும் கடுமையாகவும் கிண்டலாகவும் விமர்சனம் செய்தபோதும் அதை கொண்டு கொள்ளாமல் தினகரன் புகழ் பாடுவதிலேயே குறிக்கொள்ளாக இருந்தவர்

இந்த நிலையில் தினகரன் சமீபத்தில் ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ என்ற அமைப்பை தொடங்கிய நிலையில் இந்த கட்சியின் பெயரில் திராவிடமும் அண்ணாவும் இல்லை என்ற காரணத்தை கூறி அக்கட்சியில் இருந்து வெளியேறியதுடன் இனி அரசியலில் இருந்தும் ஓய்வு பெறவிருப்பதாகவும் அறிவித்துள்ளார். இந்த நிலையில் ஏற்கனவே அவரை வச்சு செய்து வரும் நெட்டிசன்கள் தற்போது வறுத்தெடுத்து வருகின்றனர். இதுகுறித்து நெட்டிசன்களின் கருத்துக்களை பார்ப்போம்

நாஞ்சில்_சம்பத் #தினகரன் அணியை விட்டு விலகல்
என் உயிர் இருக்குற வரைக்கும் இனி #டிடிவி அணிய விட்டு போக மாட்டேனு சொன்னதெல்லாம் என்ன ஆச்சு ? ? இது தான் மக்களே #ஊழல் வியாதிகளின் #முகம்

அண்ணாவும் திராவிடமும் இல்லாத இடத்தில் நான் இல்லை – நாஞ்சில் சம்பத்.
டிரம்ப் கட்சில இருந்து அழைப்பு வந்திருக்குன்னு சொன்னாலும் சொல்லுவார்.

டிடிவி அணியிலிருந்து
நாஞ்சில் சம்பத் விலகல்
அரசியலுக்கு முழுக்கு
-செய்தி#இன்னோவ ஓட
டீசல் போடலனாலும்
பொழப்பு ஓட
கூலியாவது கொடுக்கனுமில்ல
கூலியும் இல்லனா எப்படி

நாஞ்சில் சம்பத் அரசியலில் இருந்து ஓய்வு #
அளவுக்கு மீறினால் அமிர்தம் மட்டுமல்ல சொம்பு தூக்குறதும் நஞ்சுதான்

நாஞ்சில் சம்பத் அரசியலிலிருந்து விலகல் – செய்தி#
விலகல்வேறு, ஓய்வு வேறு. நீங்க வேண்டுமானால் பாருங்க. விரைவில் எதாவது ஒரு கட்சியில் சேர்ந்து பேச்சாளராகிவிடுவார்.

நாஞ்சில் சம்பத் புதிய கட்சி ஆரம்பிக்க போகிறார் கட்சி பெயர் என்னவாருக்கும் அண்ணா அம்மா எம்ஜிஆர் திராவிட பெட்டி இன்னொவா முன்னேற்ற கழகம் இதெல்லாம் ப்ரேக்கிங் நியூஸ்

நாஞ்சில் சம்பத் அரசியலிலிருந்து விலகல் – செய்தி#
விலகல்வேறு, ஓய்வு வேறு. நீங்க வேண்டுமானால் பாருங்க. விரைவில் எதாவது ஒரு கட்சியில் சேர்ந்து பேச்சாளராகிவிடுவார்

டிடிவி அணியிலிருந்து
நாஞ்சில் சம்பத் விலகல்
அரசியலுக்கு முழுக்கு
-செய்தி#ஆமா பின்ன
அசத்தப் போவது யாரு
நிகழ்ச்சி போல
எவ்வளவு காமெடி பண்றாரு
யாராவது பாராட்டுறீங்களா
எல்லோரும் திட்டினா எப்படி

Leave a Reply

Your email address will not be published.