லாரன்ஸ் கொடுத்த ரூ.50 லட்சம் எங்கே?

லிஸ்ட்டிலேயே இல்லையே என நெட்டிசன்கள் கேள்வி!

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் சமீபத்தில் ரூ.3 கோடி கொரோனா தடுப்பு நிதியாக அறிவித்தார். அதில் ரூ.50 லட்சம் தமிழக முதல்வர் நிவாரண நிதியாக வழங்கவிருப்பதாகவும் கூறினார்.

இந்த நிலையில் நேற்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் இதுவரை மொத்தம் ரூ.134 கோடி நிதி கிடைத்திருப்பதாகவும், யார் யார் எவ்வளவு கொடுத்துள்ளார்கள் என்ற விபரத்தையும் வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த லிஸ்ட்டில் ராகவா லாரன்ஸ் கொடுத்ததாக கூறிய ரூ.50 லட்சம் இல்லை.

இதனையடுத்து நெட்டிசன்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். லாரன்ஸ் உண்மையிலேயே கொடுத்தாரா? அல்லது அறிக்கை மட்டும் தான் கொடுத்தாரா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே அவர் ஜல்லிக்கட்டு பிரச்சனையின்போது ரூ.1 கோடி தருவதாக அறிவித்து அதன்பின் அவர் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என்று கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.