அந்தப் பெண்ணை ஜெயிலில் போடுங்கள்: ஹனிமூன் கொண்டாடி விட்டு திரும்பிய பெண்ணுக்கு நெட்டிசன்கள் கண்டனம்

கணவருடன் ஹனிமூன் கொண்டாடிவிட்டு பெங்களூர் திரும்பிய இளம்பெண் ஒருவரை ஜெயிலில் போடுங்கள் என நெட்டிசன்கள் கண்டித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவருக்கு கடந்த மாதம் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகள் வெளிநாட்டிற்கு ஹனிமூன் சென்று திரும்பி நிலையில் கணவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது

அதனை அடுத்து அவரது மனைவிக்கும் கொரோனா இருக்கலாம் என சந்தேகப்பட்டு அவரை பெங்களூர் மருத்துவமனையில் அனுமதித்தனர் இந்த நிலையில் கொரோனா அவருக்கும் இருந்தது. ஆனால் இந்த அறிகுறி இருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்று விமானம் மூலம் மும்பைக்கு சென்று உள்ளார்

அங்கு தனது குடும்பத்தினருடன் அவர் தங்கி உள்ளார் பிறகு ரயிலில் உறவினரை பார்க்க சென்றுள்ளார் இந்த நிலையில் அவரை கண்டுபிடித்து பிடித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்ததால், அவர் பயணம் செய்த விமானம் ரயில் ஆகியவற்றில் அவருடன் பயணம் செய்தவர்களையும் கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக உள்ளனர்

கொரோனா அறிகுறி இருப்பது தெரிந்தும் வேண்டுமென்றே பயணம் செய்த அந்த பெண்ணை சுட்டுக் கொல்லுங்கள் என நெட்டிசன்கள் கூறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply