உலக ஹாக்கி லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை  7-2 என்ற அபார கோல் கணக்கில் வென்று நெதர்லாந்து அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

டெல்லியில் கடந்த சில நாட்களாக உலக ஹாக்கி லீக் போட்டிகள் நடந்து வருகின்றது. நேற்று நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் நெதர்லாந்து அணி நியூசிலாந்து அணியுடன் மோதியது . ஆரம்பத்தில் இருந்தே தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்ட நெதர்லாந்து அணி வீரர்கள் மிக எளிதாக அடுத்தடுத்து கோல்கள் போட்டு அபாரமாக விளையாடினர்.

முதல் பாதிவரை ஒரு கோல் கூட போட முடியாமல் நியூசிலாந்து அணியினர் திணறிவந்தனர். இடைவேளைக்கு சற்று முன்னர் நியூசிலாந்து வீரர் 1 கோல் அடித்து மானத்தை காப்பாற்றினார்.

பின்னர் நடந்த இரண்டாவது பாதியிலும் நெதர்லாந்து அணியினரின் ஆதிக்கம் தொடர்ந்தது. ஆட்டநேர முடிவில் 7-2 என்ற கோல்கணக்கில் அபாரமாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றது. நெதர்லாந்து அணியின் ஜாங்கெர் அடுத்தடுத்து மூன்று ஹாட்ரிக் கோல்கள் அடித்து ஆட்ட நாயகன் விருதையும் தட்டிசென்றார்,

மேலும் 5வது இடத்துக்கு நடைபெற்ற போட்டியில் இந்திய அணி பெல்ஜியம் அணியுடன் மோதியது. இதில் இந்தியா 1-2 என்ற கணக்கில் தோல்வியுற்று 6 வது இடத்தைபிடித்தது. வெற்றிபெற்ற பெல்ஜியம்அணி 5வது இடத்தை வென்றது.

Leave a Reply