shadow

உலகக்கோப்பை கால்பந்து.. காலிறுதிக்கு தகுதி பெற்ற நெதர்லாந்து-அர்ஜெண்டினா!

உலக கோப்பை கால்பந்து போட்டியில் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நாக்-அவுட் சுற்றில் நெதர்லாந்து-அர்ஜெண்டினா அணிகள் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

முதல் நாக்அவுட் சுற்றில் அமெரிக்கா – நெதர்லாந்து அணிகள் மோதிய நிலையில் நெதர்லாந்து 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அடுத்ததாக ஆஸ்திரேலியா – அர்ஜென்டினா அணிகளுக்கு இடையிலான போட்டியில் அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இன்று இரவு பிரான்ஸ் – போலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற உள்ளது